தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
                    
                    
                        இந்தியாவின் நேரடி நிகழ்வுகள் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை - வேவ்ஸ் உச்சி மாநாட்டில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் வெளியிட்டார்
                    
                    
                        
                    
                 
                
                
                    
                         Posted On: 
                            03 MAY 2025 5:46PM
                        |
          Location: 
            PIB Chennai
                    
                 
                
                
                
                
                மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், “இந்தியாவின் நேரடி பொழுதுபோக்கு நிகழ்வுகள் பொருளாதாரம்: முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்திசார் வளர்ச்சி” (India’s Live Events Economy: A Strategic Growth Imperative) என்ற தலைப்பிலான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.  வேவ்ஸ் மாநாட்டின் அறிவுசார் கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் சேர்க்கப்பட்ட ஈவெண்ட்ஸ் எஃப்ஏக்யூஸ் மீடியா (EventFAQs Media) நிறுவனத்தால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட தாகும். இந்தியாவில் இப்பிரிவில் வெளியிடப்படும் முதல் வெள்ளை அறிக்கை இதுவாகும்.
இந்த வெளியீட்டு நிகழ்வில் தகவல்  ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, மூத்த பொருளாதார ஆலோசகர் திரு ஆர்.கே. ஜெனா, இணைச் செயலாளர் திருமதி மீனு பத்ரா, ஈவெண்ட்ஸ் எஃப்ஏக்யூ நிறுவன நிர்வாக இயக்குநர் திரு தீபக் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் நேரடி பொழுதுபோக்குத் துறையின் விரிவான பகுப்பாய்வை வெள்ளை அறிக்கை முன்வைக்கிறது. வளர்ந்து வரும் போக்குகள், வளர்ச்சிப் பாதைகள், துறையின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சிக்கான உத்திசார் பரிந்துரைகள் ஆகியவற்றை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் நேரடி பொழுதுபோக்கு நிகழ்வுகளின் சூழல் ஒரு சிறந்த மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. நாட்டின் கலாச்சார, படைப்பாற்றல் பொருளாதாரத்தின் கட்டமைக்கப்பட்ட செல்வாக்குமிக்க தூணாக இது உருவெடுத்துள்ளது. 
இந்தத் துறையில் முக்கிய வளர்ச்சியில் சுற்றுலாவின் எழுச்சியும் அடங்கும். கிட்டத்தட்ட 5 லட்சம் பார்வையாளர்கள் நேரடி இசை நிகழ்வுகளுக்காக பல இடங்களுக்குப் பயணம் செய்துள்ளனர். இது ஒரு வலுவான இசை-சுற்றுலா பொருளாதாரத்தை இது குறிக்கிறது. இந்த நிகழ்வுகள் இரண்டாம் நிலை நகரங்களிலும் அதிகரித்துள்ளன. 
இந்த உத்வேகம் வேலைவாய்ப்புகள், கலைத் திறமை மேம்பாடு ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது. நேரடி பொழுதுபோக்கு என்பது இந்தியாவின் படைப்புப் பொருளாதாரத்தில் இனி முக்கியப் பங்கு வகிக்கும். தற்போதைய சூழலில் பெரிய அளவிலான நிகழ்வுகள் பொதுவாக ஒவ்வொன்றும் உத்தேசமாக 2,000 முதல் 5,000 தற்காலிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இது வாழ்வாதாரத்தை ஆதரிப்பதிலும், துடிப்பான பணியாளர்களை வளர்ப்பதிலும் இந்தத் துறையின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக் காட்டுகிறது.
இந்த நிகழ்வில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை குறித்த புள்ளிவிவர கையேடு 2024–25, இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை குறித்த ஒரு ஒழுங்குமுறை கையேடு 2025 உள்ளிட்ட முக்கிய அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.
கவனம் செலுத்தப்பட்ட முதலீடுகள், கொள்கை ஆதரவு, உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவற்றின் மூலம், இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் உலக அளவில் முதல் ஐந்து நேரடி நிகழ்வுகள் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளது. இது பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான புதிய வழிகளைத் திறக்கும்.
வேவ்ஸ் உச்சிமாநாடு தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடரலாம்:
எக்ஸ்:
https://x.com/WAVESummitIndia 
https://x.com/MIB_India 
https://x.com/PIB_India 
https://x.com/PIBmumbai 
இன்ஸ்டாகிராம்:
https://www.instagram.com/wavesummitindia 
https://www.instagram.com/mib_india 
https://www.instagram.com/pibindia 
****
Release ID: 2126506
TS/PLM/RJ
                
                
                
                
                
                
                
                
                    
                        
                            Release ID:
                            (Release ID: 2126546)
                              |   Visitor Counter:
                            38
                        
                        
                            
Read this release in: 
                            
                                    
                                    
                                        English 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Urdu 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        हिन्दी 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Marathi 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Nepali 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Assamese 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Punjabi 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Gujarati 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Telugu 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Kannada 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Malayalam