தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
10-வது தேசிய சமூக வானொலி விருதுகள் வழங்கப்பட்டன
Posted On:
03 MAY 2025 4:26PM
|
Location:
PIB Chennai
8-வது தேசிய சமூக வானொலி மாநாட்டை, மும்பையில் இன்று நடைபெற்ற உலக ஒலி,ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமும் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்வில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், 12 சிறந்த சமூக வானொலி நிலையங்களுக்கு 10வது தேசிய சமூக வானொலி விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய டாக்டர் எல். முருகன வெற்றியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதுமை, உள்ளடக்கிய தன்மை மற்றும் தாக்கம் மூலம் இந்தியாவில் சமூக ஊடகங்களின் செயல்பாட்டை வலுப்படுத்துவதே தேசிய மாநாட்டின் நோக்கமாகும் என்று கூறினார். சமூக வானொலி என்பது நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள மக்களைச் சென்றடையக்கூடிய ஒரு கருவியாகும் என்று மத்திய இணையமைச்சர் கூறினார். நாடு முழுவதும் உள்ள சமூக வானொலிகள் ஏதோ ஒரு வகையில் நல்ல நோக்கங்களுக்கு சேவை ஆற்றுகின்றன என்றும் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட நல்ல காரணங்களை ஆதரிக்கின்றன என்றும் அமைச்சர் மேலும் கூறினார். சமூக வானொலி நிலையங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மத்திய அரசின் முக்கியமான வளர்ச்சி முயற்சிகளை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றன. இந்த நிலையங்கள் பெண்கள் மற்றும் பழங்குடி சமூகம் உள்ளிட்ட பல்வேறு சமூகங்கள் மற்றும் குழுக்களுக்கான நலத்திட்ட நடவடிக்கைகளில் புதிய பரிமாணத்தைச் சேர்க்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
வேவ்ஸ் 2025-ன் முதல் பதிப்பைக் குறித்து பேசிய டாக்டர் எல். முருகன், புதிய யோசனைகள் அதிலிருந்து உருவாகும் என்றும், படைப்பு பொருளாதாரம் என்பது வரும் நாட்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு வளர்ந்து வரும் துறை என்றும் கூறினார்.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, இணைச் செயலாளர் (ஒளிபரப்பு) திரு பிருதுல் குமார் மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் அனுபமா பட்நாகர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட சமூக வானொலி நிலையங்களின் பிரதிநிதிகளை ஒரே மேடையில் ஒன்றிணைத்து உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்பை வழங்க இந்த மாநாடு உதவியது. தற்போது, நாடு முழுவதும் 531 சமூக வானொலி நிலையங்கள் உள்ளன. பொதுத் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு உருவாக்கத்தில் சமூக வானொலியின் முக்கிய பங்கையும், சமூக வளர்ச்சியில் அவற்றின் ஆற்றலையும் மாநாடு வலியுறுத்தியது.
****
(Release ID: 2126478)
TS/PKV/RJ
Release ID:
(Release ID: 2126553)
| Visitor Counter:
30
Read this release in:
Marathi
,
English
,
Nepali
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Urdu
,
Assamese
,
Odia
,
Malayalam