பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
மே 5 முதல் 8 வரை வாஷிங்டன் டிசி-யில் உலக வங்கி தலைமையகத்தில் நடைபெறும் உலகளாவிய நில சீர்திருத்த பேச்சுவார்த்தைகளில் இந்தியக் குழு பங்கேற்கிறது
प्रविष्टि तिथि:
04 MAY 2025 12:35PM by PIB Chennai
அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி-யில் உலக வங்கி தலைமையகத்தில் 2025 மே 5 முதல் 8 வரை நடைபெறும் 'உலக வங்கி நில சீர்திருத்த மாநாடு 2025'-ல் இந்திய உயர்நிலைக் குழு பங்கேற்கவுள்ளது. இந்தியாவில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் ஸ்வாமித்வா திட்டம் கிராம மஞ்சித்ரா (Gram Manchitra) போன்ற முன்முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படவுள்ளது.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் தலைமையில், இணைச் செயலாளர் திரு அலோக் பிரேம் நாகர், கூடுதல் சர்வேயர் ஜெனரல் திரு சைலேஷ் குமார் சின்ஹா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு இதில் பங்கேற்கிறது. சர்வதேச நில நிர்வாகம் குறித்த இரண்டு முக்கிய அமர்வுகளில் இந்தியாவில் செயல்படுத்தப்படும் ஸ்வாமித்வா (கிராமப் பகுதிகளில் ஆய்வு செய்து நிலங்களை, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடமாக்கல்) திட்டம் எடுத்துரைக்கப்படும்.
"விழிப்புணர்விலிருந்து செயல்பாட்டுக்கு நகர்தல்" என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு நடைபெறும் உலக வங்கி நில மாநாடு, நில நிர்வாக உத்திகளை ஆராயும் நோக்கிலும், நிலையான வளர்ச்சிக்காக நில நிர்வாகத்தை நவீனமயமாக்கும் நோக்கிலும் விவாதங்களை ஒருங்கிணைக்கும். பருவ நிலைக்கு ஏற்ற நிர்வாகத்தை உருவாக்குவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும். துறை சார்ந்த வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்பார்கள்.
இந்தியாவில் ட்ரோன்கள், புவிசார் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கிராமப்புற சொத்துக்களின் சட்டப்பூர்வ உரிமையை வழங்கும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ், 1.6 லட்சம் கிராமங்களில் 24.4 மில்லியனுக்கும் அதிகமான நில உரிமையாளர்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
****
(Release ID: 2126696)
SM/PLM/RJ
(रिलीज़ आईडी: 2126726)
आगंतुक पटल : 50