தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
                    
                    
                        "உங்கள் நம்பகத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், உங்கள் எல்லைகளை வரையறுத்தைக் கொள்ளுங்கள், உங்கள் தகவல்களில் நேர்மை இருக்கட்டும்" : சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு வேவ்ஸ் குழு அறிவுறுத்தல்
                    
                    
                        
                    
                 
                
                
                    
                         Posted On: 
                            04 MAY 2025 1:39PM
                        |
          Location: 
            PIB Chennai
                    
                 
                
                
                
                
                சமூக ஊடக விளம்பரங்களில் சிறந்த நடைமுறைகள் குறித்து சமூக ஊடக பிரபலங்களுக்கு எடுத்துரைக்கும் பிரத்யேக அமர்வு இன்று (04.05.2025) மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில், உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சிமாநாடான வேவ்ஸ் (WAVES) -2025-ல் நடைபெற்றது.
இந்தக் குழுவில் இந்திய விளம்பர தரநிலைகள் கவுன்சிலான ஏஎஸ்சிஐ-யின் (ASCI) இயக்குநர் திருமதி சஹேலி சின்ஹா, திரைப்பட நடிகரும் சமூக ஊடக பிரபலமுமான திருமதி ஷிபானி அக்தர், பொழுதுபோக்கு பத்திரிகையாளர் திருமதி மயங்க் சேகர், பாக்கெட் ஏசஸ் நிறுவனத் தலைமை வணிக அதிகாரி திருமதி வினய் பிள்ளை உள்ளிட்டோர் இந்த அமர்வில் பங்கேற்றனர். 
டிஜிட்டல் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துபவர்களின் வளர்ந்து வரும் பங்கு, சமூக ஊடக டிஜிட்டல் விளம்பரத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்த தேவையான நெறிமுறைகள், படைப்பாற்றல், சட்ட கட்டமைப்புகள் போன்றவை குறித்து விவாதங்கள் நடைபெற்றன. நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கங்களின் பொறுப்புணர்வு ஆகியவை சமூக ஊடக விளம்பரங்களின் சந்தைப்படுத்துதலுக்கு முக்கிய தூண்கள் என்று குழு வலியுறுத்தியது.
திரு மயங்க் சேகர் பேசுகையில். தற்போதைய சகாப்தத்தில், பிரபலம் என்பது திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவற்றைத் தாண்டி சமூக வலைதளம் சார்ந்ததாகவும் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். படைப்பாளிகள் தங்கள் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் வேண்டும் என அவர் எச்சரித்தார். விளம்பர உதவி (ஸ்பான்சர்) மூலம் வழங்கப்பட்ட உள்ளடக்கத்தில் நேர்மையும் உண்மைச் சரிபார்ப்பும் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார்.
செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் கூட்டு செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும், ஒரு பதிவு பணம் செலுத்தப்பட்டதால் வெளியிடப்பட்டதா அல்லது விளம்பர அடிப்படையிலானதா  என்பதை வெளியிட வேண்டும் என்றும் திருமதி சஹேலி சின்ஹா கூறினார். சமூக வலைதளங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள், பார்வையாளர்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சமூக ஊடக உள்ளடக்க படைப்பாளிகள் தங்கள் எல்லைகளை வரையறுக்க வேண்டும் எனவும் தங்களைப் பின்தொடர்பவர்களுக்கு நேர்மையான தகவல்களைத் தர வேண்டும் எனவும் குழுவினர் கேட்டுக் கொண்டனர். மேலும் விளம்பர வழிகாட்டுதல்கள், சமூக ஊடக தள விதிமுறைகள் ஆகியவற்றின் படி செயல்பட வேண்டும் எனவும் குழுவினர்  அறிவுறுத்தினர்.
டிஜிட்டல் விளம்பர சூழல் அமைப்பில் வெளிப்படைத்தன்மையை இந்த அமர்வு வலியுறுத்தியது. தொழில்முறை செயல்காட்டிகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கான அழைப்புடன் இந்த அமர்வு நிறைவடைந்தது.
வேவ்ஸ் உச்சிமாநாடு தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடரலாம்: 
எக்ஸ்:
https://x.com/WAVESummitIndia 
https://x.com/MIB_India 
https://x.com/PIB_India 
https://x.com/PIBmumbai 
இன்ஸ்டாகிராம்:
https://www.instagram.com/wavesummitindia 
https://www.instagram.com/mib_india 
https://www.instagram.com/pibindia  
****
Release ID: 2126715
SM/PLM/RJ
                
                
                
                
                
                
                
                
                    
                        
                            Release ID:
                            (Release ID: 2126764)
                              |   Visitor Counter:
                            31