தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
                    
                    
                        “இந்தியாவின் உள்நாட்டு விளையாட்டுகளை உலக அரங்கில் எழுச்சி பெறச் செய்தல்” - இந்தியாவின் விளையாட்டுப் பாரம்பரியத்தை கொண்டாடவும் உலகமயமாக்கவும் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் அழைப்பு
                    
                    
                        
                    
                 
                
                
                    
                         Posted On: 
                            04 MAY 2025 2:50PM
                        |
          Location: 
            PIB Chennai
                    
                 
                
                
                
                
                மும்பையில் வேவ்ஸ் உச்சிமாநாட்டில் நடைபெற்ற ஒரு உற்சாகமான குழு விவாதத்தில், உள்நாட்டு விளையாட்டுகளின் வளமான பாரம்பரியம் குறித்தும் அவற்றின் வளர்ந்து வரும் பயணம் குறித்தும் உரையாடல் இடம்பெற்றது.  “உள்நாட்டு விளையாட்டுகள்: இந்தியாவிலிருந்து உலகளாவிய நிலைக்கு” என்ற தலைப்பிலான இந்த அமர்வில், செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்கள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், விளையாட்டு தொழில்முனைவோர், வல்லுநர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். 
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, இந்தியாவில் பூர்வீக விளையாட்டுகளின் ஆழமான கலாச்சார வேர்களை எடுத்துரைத்தார். இந்த விளையாட்டுகள் வெறும் உடல் ரீதியான போட்டிகள் அல்ல எனவும் அவை நமது மரபுகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும் அவர் கூறினார். இந்தியாவை உலகளாவிய விளையாட்டு சக்தியாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார். துடிப்பான பழங்குடி சமூகங்களின் தாயகமான ஒடிசா, பாரம்பரிய விளையாட்டுகளைப் பாதுகாத்து, விளையாட்டு மையமாக வளர்ந்து வருவதாக அவர் கூறினார். 
மத்திய விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே பேசுகையில் இந்தியா ஏற்கனவே யோகாவின் உலகளாவிய தூதராக உருவெடுத்துள்ளது எனவும் இப்போது, கோ-கோ, கபடி போன்ற நமது பாரம்பரிய விளையாட்டுகளை சர்வதேச அரங்கில் பெருமையுடன் கொண்டு செல்வதாகவும் கூறினார். கேலோ இந்தியா முயற்சி அடிமட்டத்தில் உள்ள திறமையாளர்களை வளர்ப்பதிலும், இந்திய விளையாட்டுகளின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைப்பதிலும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டு உடல் நலனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உறவுகளை வலுப்படுத்தி ஒற்றுமையை வளர்க்கிறது என்றும் அவர் கூறினார்.
புரோ கபடி லீக்கின் லீக் ஆணையர் அனுபம் கோஸ்வாமி, 
ஈரானைச் சேர்ந்த பிரபல கபடி வீரர் ஃபசல் அட்ராச்சாலி,  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்குமுறைக் குழுத் தலைவர் நிக் கோவர்ட், கோ-கோ கூட்டமைப்பின் தலைவர் சுதான்ஷு மிட்டல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று உரையாற்றினர்.
இந்த அமர்வை நடிகர் மந்த்ரா முக்த் நெறிப்படுத்தினார். அவர் பல்வேறு நுண்ணறிவுகளையும் எதிர்காலத்திற்கான உத்திகளையும் ஒன்றிணைத்து விவாதத்தைத் திறமையாக வழிநடத்தினார்.
****
Release ID: 2126741
SM/PLM/RJ
                
                
                
                
                
                
                
                
                    
                        
                            Release ID:
                            (Release ID: 2126773)
                              |   Visitor Counter:
                            52
                        
                        
                            
Read this release in: 
                            
                                    
                                    
                                        Kannada 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Punjabi 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        हिन्दी 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Urdu 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        English 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Marathi 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Nepali 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Assamese 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Gujarati 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Odia 
                                
                                    ,
                                
                                    
                                    
                                        Telugu