அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
2025 ஆம் ஆண்டு தேசிய தொழில்நுட்ப தினத்திற்கான கருப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது
Posted On:
10 MAY 2025 6:24PM by PIB Chennai
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்நுட்ப தினத்திற்கான அதிகாரப்பூர்வ கருப்பொருளை இன்று வெளியிட்டது. "புதிய தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் முடுக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சகாப்த காலம் (யந்த்ரா)" என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.
இந்தியாவின் அறிவியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய யந்த்ரா என்ற சொல், இயந்திர புத்திசாலித்தனத்தை மட்டுமல்ல, அமைப்புகள், இணைப்பு மற்றும் அளவிடக்கூடிய தீர்வுகளின் குறியீட்டு சக்தியையும் குறிக்கிறது. சகாப்த காலம் என்பது ஒரு சகாப்த மாற்றத்தைக் குறிக்கிறது, இது தொழில்நுட்ப தழுவலில் இருந்து உலகளாவிய தொழில்நுட்பத் தலைமைக்கு மாறுவதில் நாட்டின் வேகத்தின் அடையாளமாகும்.
1998 மே 11 ஆம் தேதி அன்று, ஆபரேஷன் சக்தியின் கீழ் இந்தியா வெற்றிகரமான அணுசக்தி சோதனைகளை நடத்தி, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹன்சா-3 விமானத்தின் முதல் பயணம் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நிகழ்வுகளை தேசிய தொழில்நுட்ப தினம் நினைவுகூர்கிறது. இந்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, அப்போதைய பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் மே 11 ஆம் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தார்.
பல ஆண்டுகளாக, தேசிய தொழில்நுட்ப தினம் அறிவியல் சிறப்பை கௌரவிப்பதற்கும், தொழில்துறை கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துவதற்கும், அறிவியல், சமூகம் மற்றும் தொழில்துறைக்கு இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் ஒரு முதன்மையான நிகழ்வாக உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் மே 11, 2025 அன்று நடைபெறும். இந்த நிகழ்வு, கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறைத் தலைவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனர்களை ஒன்றிணைத்து, இந்தியாவின் தொழில்நுட்ப பயணத்தை ஆழமான தொழில்நுட்பம், துல்லிய பொறியியல் மற்றும் மாற்றத்தக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் விரைவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128090
***
RB/RJ
(Release ID: 2128129)
Visitor Counter : 2