பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் மற்றும் செபி ஆகியவை “முதலீட்டாளர் முகாம்” முன்முயற்சிக்கான உத்திசார் தயாரிப்பு கூட்டத்தை நடத்தின

Posted On: 10 MAY 2025 6:30PM by PIB Chennai

முதலீட்டாளர்களின் அணுகலை மேம்படுத்துவதற்கும், உரிமை கோரப்படாத ஈவுத்தொகைகள் மற்றும் பங்குகளை திரும்பப் பெறும் செயல்முறையை நெறிப்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சியாக, இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துடன் (செபி) இணைந்து ஒரு ஆயத்தக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை, மே 9, 2025 அன்று மும்பையில் உள்ள செபி அலுவலகத்தில் ஏற்பாடு செய்தது.

இந்தக் கூட்டத்தில் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளருமான திருமதி அனிதா ஷா அகெல்லா, ஆணையத்தின் அதிகாரிகள்; செபி-இன் முழுநேர உறுப்பினர் திரு அனந்த் நாராயண்.ஜி, நிர்வாக இயக்குநர்கள் திரு சஷி குமார் வல்சகுமார் மற்றும் திரு ஜீவன் சோன்பரோட் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை, தேசிய பத்திர வைப்புத்தொகை லிமிடெட், மத்திய வைப்புத்தொகை சேவைகள் லிமிடெட் மற்றும் லிங்க் இன்டைம் மற்றும் பரிமாற்ற முகவர்கள் உள்ளிட்ட முக்கிய நிதிச் சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த உத்திசார் கூட்டம், நாடு தழுவிய முதலீட்டாளர் உதவி முயற்சியான "முதலீட்டாளர் முகாம்"- அறிமுகப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது - இது முதலீட்டாளர்கள் கோரப்படாத ஈவுத்தொகை மற்றும் பங்குகளை மிகவும் எளிதாக மீட்டெடுக்கவும், நிதி கல்வியறிவை மேம்படுத்தவும், இடைத்தரகர்களை நம்பியிருப்பதைக் குறைக்கவும் உதவும் நோக்கில் அமைந்துள்ளது. இந்த முயற்சியில் அர்ப்பணிப்புள்ள உதவி மையங்கள் இடம்பெறும், இது முதலீட்டாளர்கள் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பதிவாளர்கள் மற்றும் பரிமாற்ற முகவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2128092  

***

RB/RJ


(Release ID: 2128130)
Read this release in: English , Urdu , Marathi , Hindi