அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிமென்ட் தொழில் துறைக்கான கல்வி-தொழில்துறைகளின் கூட்டு ஒத்துழைப்பில் இந்தியா முதல் கரியமிலவாயு சேகரிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான சோதனைப்படுகைத் தொகுப்பை தொடங்குகிறது
Posted On:
14 MAY 2025 3:37PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அண்மையில் முன்னோடி தேசிய அளவிலான முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது: சிமென்ட் உற்பத்தித் துறையில் ஐந்து கரியமிலவாயு சேகரிப்பு மற்றும் பயன்பாடு சோதனைப்படுகைகள், தொழில்துறையில் கரியமில வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் வகையிலான முதல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பிற்கான தொகுப்புக்களை உருவாக்குகின்றன.
தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளுக்கான இலக்குகளை வளர்ப்பதற்கும், தொழில்துறை மாற்றத்திற்கான நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான இலக்குகளை அடைவதற்கும், 2070 - ம் ஆண்டுக்குள் கரியமில வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான பொருளாதாரத்தை நிலையை அடைவதற்கான அரசின் இலக்கை நோக்கி, இந்தியாவின் பருவநிலை மாற்றத் தடுப்பு நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
சிமென்ட், எஃகு, மின்சாரம், எண்ணெய், இயற்கை எரிவாயு, ரசாயனங்கள், உரங்கள் போன்ற துறைகளில் கார்பன் சேகரிப்பு மற்றும் பயன்பாடு, தொழில்துறை செயல்முறைகளில் இருந்து கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பது, செயற்கை எரிபொருள்கள், யூரியா, சோடா, சாம்பல், ரசாயனங்கள், உணவு தர கரியமில வாயு அல்லது கான்கிரீட் திரட்டுகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம் அதன் உமிழ்வைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கார்பன் நீக்கம் செய்வதற்கான கடினமான நிலைகளைக் கொண்டுள்ள இந்த தொழில்கள் கார்பன் பயன்பாட்டைக் குறைத்து, அதன் செயல்பாடுகளை திறம்பட தொடரும் போது நிகர பூஜ்ஜிய இலக்குகளை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட சாத்தியமான வழிவகைகளை வழங்குகிறது. இந்த களத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வளர்ப்பதில் அறிவியல், தொழில்நுட்பத்துறை முன்னேற்றங்களுக்கான பெரும் அளவிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாட்டின் உறுதியான பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் மிக முக்கியமான, சிமென்ட் உற்பத்தித் தொழிலில் கார்பன் பயன்பாட்டைக் குறைக்க முடியாத முக்கிய துறைகளில் ஒன்றாகும். தேசிய கார்பனைசேஷன் உறுதிமொழிகளை ஒத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது. சிமென்ட் உற்பத்தித் துறையின் கார்பன் வெளியேற்றத்தை நீக்குவதற்கான புதிய தொழில்நுட்பங்கள் தேசிய நிகர பூஜ்ஜிய இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128620
***
SM/SV/AG/RR
(Release ID: 2128690)