சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மதுரை மேலூரில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆள்சேர்க்கும் முகவர்களுக்கு எதிராக சென்னை குடியுரிமை பாதுகாப்பாளர், மதுரை காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள்
Posted On:
15 MAY 2025 6:18PM by PIB Chennai
மதுரை மேலூரில் பல்வேறு இடங்களில் செயல்பட்டுவந்த சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆள்சேர்க்கும் முகவர்களுக்கு எதிராக மதுரை காவல்துறையினருடன் இணைந்து சென்னை குடியுரிமை பாதுகாப்பாளர் சோதனை நடத்தினார். அப்போது நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து தற்போது அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளில் வேலை தேடுவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்தியத்திற்கான குடியுரிமை பாதுகாப்பாக திரு எம் ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் உரிமம் பெற்ற ஆள்சேர்ப்பு முகவர்களை அணுகுவது மற்றும் மட்டுமே உரிய வேலை விசாக்களை பெறுவது மட்டுமே பாதுகாப்பானது என்று அவர் கூறியுள்ளார். எனவே வெளிநாடுகளில் வேலைதேடுவோர் ஆள்சேர்ப்பு முகமைகளின் நம்பகத் தன்மை குறித்து அறிந்துகொண்டு செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக இந்திய குடிமக்களை உரிய பணியாளர் உரிமமின்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். வரும்காலங்களிலும் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
***
SM/IR/AG/RR/ RJ
(Release ID: 2128893)