சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ரயில் பயணிகளுக்கான காப்பீடு
Posted On:
16 MAY 2025 5:27PM by PIB Chennai
இந்தியாவின் மிகப்பெரிய பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான முழுமையாக இந்திய அரசுக்குச் சொந்தமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் (UIIC), 2024-25 நிதியாண்டில் ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான வருடாந்திர பிரீமிய வருமானத்தைக் கொண்ட, இந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷனின் (IRCTC) அதிகாரப்பூர்வ காப்பீட்டாளர்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஐஆர்சிடிசி என்பது அரசுக்குச் சொந்தமான இந்திய ரயில்வேக்கு டிக்கெட், உணவு மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்கும் ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனமாகும்.
இன்று, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தலைமை அலுவலகத்தில் ஐஆர்சிடிசி உடனான கூட்டாண்மையின் ஒரு வருட நிறைவு கொண்டாடப்பட்டது.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெரு நிறுவன சென்னை அலுவலகம் ஐஆர்சிடிசி-ல் தொடங்கப்பட்ட விருப்ப பயண காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு வருட காலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 14 கோடி பயணிகளுக்கு காப்பீடு வசதியை வழங்கியுள்ளது.
இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு பூபேஷ் எஸ். ராகுல், எதிர்காலத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்டார். வாடிக்கையாளர் சேவை மற்றும் பொது நலனுக்கான இந்த நிறுவனத்தின் உறுதிப்பாட்டை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவதால், வரும் நாட்களில் இதுபோன்ற பல கூட்டாண்மைகளில் நாங்கள் இணைவோம் என்று கூறினார்.
இந்த அலுவலகம் மதிப்புமிக்க மகாராஜா எக்ஸ்பிரஸ் மற்றும் கோல்டன் சாரியட் ஆகிய சொகுசு ரயில்களுக்கான பாலிசிகளையும், ஐ.ஆர்.சி.டி.சி பயணிகளுக்கான உள்நாட்டு பயணக் காப்பீட்டையும் வழங்குகிறது.
UIIC நிர்வாக இயக்குநர் திரு. மேத்யூ ஜார்ஜ், UIIC நிர்வாக இயக்குநர் திருமதி. சுனிதா குப்தா, UIIC தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. பூபேஷ் எஸ். ராகுல், UIIC பொது மேலாளர் திரு. எச். ஆர். கங்வால், UIIC துணைப் பொது மேலாளர் திரு. வி. லதா, IRTS குழு பொது மேலாளர் (சுற்றுலா), IRCTC நிறுவன அலுவலகம், UIIC தலைமை அலுவலக பொது மேலாளர் திரு. பிரணய் குமார், IRCTC கூடுதல் பொது மேலாளர் (சுற்றுலா), திரு. ரதீஷ் சந்திரன், LCB துணைப் பொது மேலாளர் திரு. வி. லதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
***
SM/RR/SG
(Release ID: 2129119)