பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசத்தில் இந்திய ரயில்வேயில் இரண்டு பல்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
28 MAY 2025 3:19PM by PIB Chennai
ரயில் வழித்தட திறனை மேம்படுத்துவதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று இந்திய ரயில்வேயில் பயணிகள் மற்றும் பொருட்களின் தடையற்ற, விரைவான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக இரண்டு பல்தடத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
ரத்லம்- நாக்டா 3-வது மற்றும் 4-வது பாதை,
வர்தா- பலார்ஷா 4-வது பாதை ஆகியவை இதில் அடங்கும்
இத்திட்டங்களின் மொத்த மதிப்பீட்டுச் செலவு ரூ.3,399 கோடியாகும் (தோராயமாக) மற்றும் இத்திட்டம் 2029-30 ஆண்டில் நிறைவு செய்யப்படும்.
இந்த திட்டங்கள், ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமான பல்மாதிரி போக்குவரத்திற்கான பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் விளைவாகும். மேலும் மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற போக்குவரத்துக்கு வகை செய்யும்.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் உள்ள நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு திட்டங்களும், இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பை சுமார் 176 கி.மீ. தொலைவிற்கு அதிகரிக்கும்.
முன்மொழியப்பட்ட பல்தட போக்குவரத்துத் திட்டம் சுமார் 19.74 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சுமார் 784 கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்.
----
(Release ID: 2131995)
AD/SM/IR/KPG/RR
(रिलीज़ आईडी: 2132067)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam