பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த, ஷாங்ரி-லா உரையாடல் 2025-ல் முப்படைகளின் தளபதி கலந்து கொள்கிறார்
Posted On:
29 MAY 2025 11:36AM by PIB Chennai
சர்வதேச உத்திசார் ஆய்வுகள் நிறுவனத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஷாங்ரி-லா உரையாடலின் 22-வது பதிப்பில் கலந்து கொள்ள முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான் 2025 மே 30 முதல் 2015 ஜூன் 01 வரை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படைத்தலைவர்கள், மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ஜெனரல் அனில் சௌகான் இருதரப்புப் பேச்சு வார்த்தைகள் நடத்துவார்.
கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்களிடையே ஜெனரல் அனில் சௌகான் உரையாற்றவுள்ளார். 'எதிர்காலப் போர்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார். நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெறும் சிறப்பு அமர்வுகளிலும் அவர் பங்கேற்று 'எதிர்கால சவால்களுக்கான பாதுகாப்பு கண்டுபிடிப்பு தீர்வுகள்' என்ற தலைப்பில் உரையாற்றுவார்.
ஷாங்ரி-லா உரையாடல் என்பது ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சிமாநாடாகும். இது உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு அமைச்சர்கள், ராணுவத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்களை ஒன்றிணைக்கிறது. இந்த நிகழ்வில் 40 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படைத் தலைவர்கள் பங்கேற்று இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது குறித்து ஆலோசிப்பார்கள். இந்த சந்திப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர பாதுகாப்பு நலன்களைப் பற்றி விவாதிக்கவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உத்திசார் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தியாவுக்கு ஒரு தளத்தை வழங்கும்.
*****
(Release ID: 2132230)
AD/TS/PLM/KPG/RR
(Release ID: 2132253)
Visitor Counter : 3