நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் 9-வது நிர்வாகக் குழு கூட்டத்திற்கு மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் தலைமை தாங்கினார்
प्रविष्टि तिथि:
29 MAY 2025 4:49PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி புதுதில்லியில் நடைபெற்ற இந்திய தர நிர்ணய அமைவனத்தின் 9-வது நிர்வாகக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவர் இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) நிர்வாகக் குழுவின் அலுவல்சார் தலைவராக உள்ளார்.
இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், பிஐஎஸ் நாட்டில் 371 மாவட்டங்களை நகைகளுக்கான கட்டாய ஹால்மார்க் குறியீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நுகர்வோருக்கு தர உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்றார். வரும் ஆண்டில் மேலும் பல மாவட்டங்களை சேர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பிஐஎஸ் முன்முயற்சிகள் குறித்து தொழில்துறை மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினருக்கு மேலும் விழிப்புணர்வு அளிப்பதற்கு அவர் சிறப்பு முக்கியத்துவம் வழங்கினார்.
பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான இந்தியத் தரநிலைகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும் பல்வேறு பிரிவுகளில் 23798 இந்தியத் தரநிலைகளை உருவாக்கியுள்ள பிஐஎஸ்-ன் சாதனைகளை அமைச்சர் பாராட்டினார்.
தரமான சூழல்சார் அமைப்பை ஊக்குவிப்பதில் பிஐஎஸ்-ன் பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார். 2024-25-ம் ஆண்டில் ஆய்வகங்கள் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகளைக் கையாண்டுள்ளதைப் பாராட்டிய அவர், மாதிரி சோதனை மற்றும் சான்றிதழ்களை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க பிஐஎஸ் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132359
***
AD/TS/IR/AG/RR
(रिलीज़ आईडी: 2132409)
आगंतुक पटल : 25