சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலனில் 11 ஆண்டுகால செயல்பாடுகளைக் கொண்டாடுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUN 2025 5:16PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை நினைகூரும் வகையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துறைசார்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கடந்த 11 ஆண்டு காலத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் முன்னேற்றத்தில் எட்டப்பட்ட முக்கிய மைல்கற்களை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கம், பயனுள்ள சேவை ஆகியவற்றில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் இறுதியில் வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளமான, சமத்துவமான இந்தியாவை உருவாக்கும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவது என துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2135153
***
AD/TS/VS/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2135206)
வருகையாளர் எண்ணிக்கை : 20