சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
புதுதில்லி கடமைப் பாதையில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தலைமை வகித்தார்
யோகா, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனதை சமநிலைப்படுத்தி நிறைவான வாழ்க்கைக்குவாழ்க்கைக்குப் பங்களிக்கிறது - திரு ஜே.பி. நட்டா
प्रविष्टि तिथि:
21 JUN 2025 9:55AM by PIB Chennai
11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். பிரதமர் இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை வகித்து அங்கு நடைபெற்ற யோகா அமர்வில் பங்கேற்றார். யோகா உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது என்று நிகழ்ச்சியில் பிரதமர் கூறினார்.
இதனிடையே மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, புது தில்லியில் உள்ள கடமைப் பாதையில் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பேசிய திரு நட்டா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியால் இன்று சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது என்றார்.
2015 முதல், யோகா, நல்வாழ்வுக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார். யோகா மக்களின் ஆரோக்கியத்தையும் உடற்தகுதியையும் மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மன தெளிவை மேம்படுத்துகிறது எனவும் சமநிலையான, நிறைவான வாழ்க்கைக்கு பங்களிக்கிறது என்றும் திரு நட்டா கூறினார்.
யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி ஆரோக்கியமான தேசத்தை நோக்கிப் பயணிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திரு ஜே.பி. நட்டா கேட்டுக் கொண்டார்.
****
(Release ID: 2138215)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2138329)
आगंतुक पटल : 25