நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி அமைச்சகம் சார்பில் 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
प्रविष्टि तिथि:
21 JUN 2025 11:42AM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகம் இன்று 11-வது சர்வதேச யோகா தினத்தை மிகுந்த உற்சாகத்துடனும் கூட்டு மனப்பான்மையுடனும் புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் கொண்டாடியது. பயிற்சி பெற்ற பயிற்றுனர்களின் வழிகாட்டுதலின் கீழ் யோகா அமர்வு நடைபெற்றது. அதிகாலையில் கூடியிருந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
விசாகப்பட்டினத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை வகித்த யோகா தின நிகழ்வை நிலக்கரி அமைச்சகம் நேரடி ஒளிபரப்பு செய்தது. புதுதில்லி சாஸ்திரி பவனில் நடந்த நிகழ்வு, நவீன காலத்தில் யோகாவின் முக்கியத்துவம் குறித்த சுருக்கமான உரையுடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து ஆயுஷ் அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பொதுவான யோகா நெறிமுறையிலிருந்து (CYP) யோகாசனங்கள், சுவாசப் பயிற்சிகள் (பிராணாயாமம்), தியான நுட்பங்களின் முழு வரிசையும் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் அமைதியையும் சிறந்த உணர்வை வெளிப்படுத்தினர். யோகாவை தினசரி வழக்கங்களில் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
****
(Release ID: 2138254)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2138375)
आगंतुक पटल : 22