சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

Posted On: 21 JUN 2025 8:15PM by PIB Chennai

சென்னை மணலியில் மத்திய உரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட்  நிறுவனத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் இன்று (21062025) நடைபெற்றது. சென்னை தாம்பரத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமமும், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

 

   

மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான மனோஜ் குமார் ஜெயின்,  மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்குநர் திரு என் ஜே முத்துக்குமார், யோகா ஆசிரியர் கல்பனா ஜெயின் ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

   

யோகா பயிற்சி அமர்வுகள் நடைபெற்றதுடன் யோகாவின் முக்கியத்துவம் குறித்து இதில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஒரே பூமி ஒரே ஆரோக்கித்திற்கு யோகா என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இரு நிறுவனங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

****

AD/RJ


(Release ID: 2138574)