விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் அமைச்சகம் சார்பில் சர்வதேச யோகா தின நிகழ்வு - மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்
Posted On:
21 JUN 2025 1:11PM by PIB Chennai
மத்திய வேளாண்மை - விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், 11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று புது தில்லியில் உள்ள பூசா வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்வில் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில், திரு சிவராஜ் சிங் சௌகான் பேசுகையில், யோகாவை அன்றாட வாழ்வில் இணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். யோகாவை ஒரு நாள் சடங்காகக் கருதாமல், நீண்டகால நல்வாழ்வை ஊக்குவிக்கும் ஒரு நிலையான பயிற்சியாகக் கருதுமாறு மக்களை அவர் வலியுறுத்தினார். ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக செய்யப்படும் யோகா ஆழமான நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். சரியான வழிகாட்டுதலின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். காயம் அல்லது தவறான நுட்பத்தால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்க்க பயிற்சி பெற்ற பயிற்றுநர்களின் மேற்பார்வையின் கீழ் ஆசனங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பிராணயாம், சுவாசத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தரும் என்பதை திரு சௌகான் எடுத்துரைத்தார்.
வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகங்களின் அதிகாரிகள், விஞ்ஞானிகள், விவசாயிகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) பிரதிநிதிகள் இந்த யோகா அமர்வில் உற்சாகமாக பங்கேற்றனர்.
****
(Release ID: 2138294)
AD/PLM/RJ
(Release ID: 2138635)
Visitor Counter : 3