பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிறுவன கூட்டாண்மை மற்றும் பெருநிறுவன தொடர்புத் துறையில் அனுபவப் பயிற்சிக்கான விண்ணப்பங்களை இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் வரவேற்கிறது

Posted On: 21 JUN 2025 9:30PM by PIB Chennai

இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (IICA), நிறுவன கூட்டாண்மை மற்றும் பெருநிறுவன தொடர்புத் துறையில் அனுபவப் பயிற்சி வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் இருந்து ஊடகப் படிப்புகள், மக்கள் தகவல் தொடர்பியல், பத்திரிகை, மக்கள் தொடர்பு அல்லது தொடர்புடைய துறைகளைப் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இறுதித் தேர்வு, தகுதி மற்றும் பணிக்கான பொருத்தத்தின் அடிப்படையில் இருக்கும். பயிற்சியாளர்களுக்கு இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவன விதிமுறைகளின்படி உதவித்தொகை வழங்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தையும் தொடர்புடைய அனுபவத்தைக் குறிப்பிடும் ஒரு சுருக்கமான கடிதத்தையும் hr@iica.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2138623   

****

RB/RJ


(Release ID: 2138714)
Read this release in: English , Urdu , Hindi