சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை ஐஐடி, ஐஐடிஎம் முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் ‘சங்கம் 2025’ வருடாந்திர நிகழ்வு பெங்களூரில் நடைபெற்றது - மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார்

Posted On: 05 JUL 2025 8:31PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் சங்கம் (IIT Madras Alumni Association – IITMAA) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த உலகளாவிய முதன்மை கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் 6-வது வருடாந்திர மாநாடு, இந்த ஆண்டு பெங்களூருவில் ஜூலை 4,5 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது.

 

புத்தாக்கம், தொழில்முனைவு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்.

நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக இடம்பெற்ற ‘ஸ்டார்ட்அப் பிட்ச்ஃபெஸ்ட் மூலம் 20 டீப்டெக் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப்களுக்கு 250-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், துணிகர முதலீட்டாளர்கள் முன்முயற்சிகளை மேற்கொள்வதற்கான தளத்தை வழங்கியது. தேர்வுசெய்யப்படும் ஸ்டார்ட்அப்களுக்கு நிதியுதவியுடன் சென்னை ஐஐடி இன்னோவேஷன் எகோசிஸ்டத்தின் ஆதரவும் கிடைக்கும். கடந்த 10 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இவ்வாறு பயன்பெற்றுள்ளன.

 

இம்மாநாட்டில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஸ் கோயல் கலந்து கொண்டார். சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி மெட்ராஸ் சான்சிபார் வளாக பொறுப்பு இயக்குநர் பேராசிரியை ப்ரீத்தி அகாலயம், உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் புதுமை மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.

செயற்கை நுண்ணறிவு, பருவநிலைத் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி ட்ரோன்கள் தொடங்கி, ரோபாட்டிக்ஸ், ஐஓடி, செயற்கை நுண்ணறிவு, பயோடெக், செமிகண்டக்டர்கள், தளவாடங்கள் மற்றும் இயக்கம், சைபர் பாதுகாப்பு, குவாண்டம் கம்ப்யூட்டிங் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனங்கள் ஜூலை 4, 2025 அன்று நடைபெற்ற ஸ்டார்ட்-அப் பிட்ச்ஃபெஸ்ட் நிகழ்வில் பங்கேற்றன.

***

AD/PLM/SG


(Release ID: 2142556)