சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தொழில்நுட்ப மேம்பாட்டு பணிக்காக ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் செயல்படாது
Posted On:
17 JUL 2025 4:22PM by PIB Chennai
அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மென்பொருளை (ஏபிடி 2.0) ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கைபடி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப சேவையை சுமூகமாகவும், பாதுகாப்பான முறையிலும் செயல்படுத்தும் வகையில் 03.08.2025 மற்றும் 04.08.2025 நாட்கள் “பரிவர்த்தனை இல்லா நாட்களாக” கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இந்த இரண்டு நாட்களும் (03.08.2025/04.08.2025) அண்ணாசாலை தலைமைச் செயலகத்தில் எந்த ஒரு தபால் சேவையும் மேற்கொள்ளப்படாது.
இந்த தற்காலிக சேவை இடைநிறுத்தம் புதிய தொழில்நுட்பம் சீராக செயல்படுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
எனவே இந்த பரிவர்த்தனை இல்லா நாட்களை கணக்கில் கொண்டு பொதுமக்கள் தங்கள் அஞ்சல் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
***
AD/GK/AG
(Release ID: 2145500)