சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவைகளுக்கான நடமாடும் வாகனம் நிறுத்தம்

Posted On: 17 JUL 2025 4:57PM by PIB Chennai

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் முதன்மையான முயற்சிகளில் ஒன்று நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனத்திட்டம். தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பாஸ்போர்ட் சேவைகள் எளிதில் கிடைக்இது வழிவகை செய்கிறது.

கிராமப்புறங்களில் வசிப்போர், மற்றும் நகர்ப்புற மையங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியாத மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நடமாடும் பாஸ்போர்ட் வாகன சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  இந்த முயற்சியின் கீழ் 16.7.2025 முதல் 18.7.2025 வரை மூன்று நாட்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த நடமாடும் பாஸ்போர்ட் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in   என்ற இணையதளத்திற்கு சென்று, ‘Check Appointment Availability’ என்பதை தேர்வு செய்து, RPO Chennai ஐ தேர்ந்தெடுத்து பாஸ்போர்ட் சேவா மையம் (PSK) பகுதியில் Krishnagiri Collector Office Mobile Van என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதனை கிளிக் செய்து நேரத்தை பதிவு செய்வதன் மூலம் இந்த சேவையை பெறலாம்.

  விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முன்பதிவை மேற்கொண்டு இந்த சிறப்பு சேவையை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

***

AD/GK/AG


(Release ID: 2145529)
Read this release in: English