சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய கடல் மீன்வள கணக்கெடுப்பு 2025

Posted On: 18 JUL 2025 5:49PM by PIB Chennai

நாடு தழுவிய கடல் மீன்பிடி கிராம கணக்கெடுப்பை மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி உள்ளது. தேசிய கடல் மீன்வள கணக்கெடுப்புக்கான (MFC-2025) ஒரு முக்கியமான நாடு தழுவிய நடவடிக்கையாக, ICAR -மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) இந்தியாவின் கடற்கரை மற்றும் தீவுப் பிரதேசங்களில் உள்ள அனைத்து கடல் மீன்பிடி கிராமங்களின் சரிபார்ப்பு மற்றும் கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது.

 

அடுத்த பதினைந்து நாட்களில், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய மீன்வள ஆராய்ச்சி மையம் (FSI) ஆகியவற்றின் 108 அதிகாரிகள் ஒவ்வொரு கடல் மீன்பிடி கிராமத்திற்கும் சென்று அதன் நிலையை சரிபார்த்து, கிராம எல்லைகளை புவிசார் குறிப்பு (georeferencing) செய்து ஒரு புதுப்பிக்கப்பட்ட கிராம பட்டியலை தயார் செய்வார்கள். CMFRI உருவாக்கிய VYAS-NAV (கிராமம்-ஜெட்டி மதிப்பீட்டு நேவிகேட்டர்) என்ற மொபைல் செயலியை பயன்படுத்துவார்கள். CMFRI உருவாக்கிய இந்தப் மொபைல் செயலியில், ஒவ்வொரு அலுவலருக்கும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தாலுகாக்கள்/துணை மாவட்டங்களில் உள்ள மீனவ கிராம பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த தீவிர களப்பயிற்சி, நவம்பர்-டிசம்பர் 2025-ல் திட்டமிடப்பட்டுள்ள விரிவான கடல் மீன்பிடி கிராமங்களின் வீட்டுக் கணக்கெடுப்புக்கான முன்மாதிரியாக விளங்கும். இந்த கணக்கெடுப்பு கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,500 கிராமங்களில் உள்ள 1.2 மில்லியன் மீனவர் குடும்பங்களின் தரவுகளை கணக்கெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நீத்து குமாரி பிரசாத், இணைச் செயலாளர் (மீன்வளத்துறை) அவர்கள் கூறினார்.

 

உள்ளூர் நிர்வாக அமைப்புகள் மற்றும் மாநில மீன்வளத் துறை பணியாளர்களுடன் இணைந்து, அதிகாரிகள், கிராமத்தின் தற்போதைய நிலை, கடல் மீன்பிடித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடு, மீனவர் குடும்பங்களின் தோராயமான எண்ணிக்கை அனைத்தையும் மதிப்பிடுவர். அது மட்டுமல்லாமல், மீனவ கிராமங்களின் புவிசார் குறியீடை ஜியோடாக் செய்வர். இது GIS அடிப்படையிலான MFC டேஷ்போர்டில் ஒருங்கிணைக்கப்படும். இந்தக் அதிகாரிகள் குழு, வீட்டுக் கணக்கெடுப்பு கட்டத்திற்கு தேவையான கணக்கெடுப்பாளர்களை உள்ளூர் சமூகத்திலிருந்து கண்டறிந்து அவர்களின் பட்டியலை தயாரிப்பர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்களுக்கு வெகு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். தரவு ஒருமைப்பாடு மற்றும் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதற்காக, மாவட்ட மற்றும் மாநில மட்டங்களில் ஆன்லைன் தரவு காப்புப் பிரதி வழிமுறை மற்றும் இரு அடுக்கு மேற்பார்வை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

CMFRI இயக்குனர் டாக்டர் கிரின்சன் ஜார்ஜ், உள்ளூர் சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு சமூக-பொருளாதார நிலைமைகள், கடல் மீன்வளத்தைச் சார்ந்திருத்தல் மற்றும் மீன்பிடி சமூகங்களின் குறிப்பிட்ட தேவைகள் குறித்த தரவுகளைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்க, அரசாங்கத்திற்கு இந்தத் தகவல் மிக முக்கியமானதாக இருக்கும். விரிவான கடல் மீன்பிடி கிராமங்களின் வீட்டுக் கணக்கெடுப்பின் வெற்றியை உறுதி செய்ய, அனைத்து கடல் மீன்பிடி கிராமங்களின் பட்டியலை தயார் செய்வது மிக அவசியம் என்று நீத்து குமாரி பிரசாத், அவர்கள் கூறினார்.

AD/KR

***


(Release ID: 2147124)
Read this release in: English