சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நீடித்த வளர்ச்சிக்கு அணுசக்தியின் அவசியம்: தேசிய பயிலரங்கில் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர்
Posted On:
25 JUL 2025 5:38PM by PIB Chennai
பசுமை எரிசக்தி தொழில்நுட்பத் துறை, புதுவைப்பல்கலைக்கழகம் மற்றும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் ஆகியவை, யுனெஸ்கோ இருக்கையின் ஆதரவுடன், ‘நீடித்த வளர்ச்சிக்கான அணுசக்தி பயன்பாட்டின் முன்னேற்றங்கள்’ என்ற தேசிய பயிலரங்கு நடைபெற்றது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கலாச்சார மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் நாட்டின் தூய்மை எரிசக்தி உற்பத்தியில் அணுசக்தியின் பங்களிப்பு, பருவநிலை மாற்றம், எரிசக்தியை பல்வகைப்படுத்தல், தேசிய நிலைத்தன்மைக்கான நோக்கங்கள் ஆகிய அம்சங்களை பரிசீலிக்க உதவுகிறது.
இந்தப் பயிலரங்கின் முதலாவது அமர்வில் தலைமை உரையாற்றிய புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, அணுசக்தி பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். அணுசக்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
அணுசக்தி தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் குறிப்பாக மருத்துவம், குடிநீர் சுத்திகரிப்பு, வேளாண்மை, எரிசக்தி உற்பத்தி போன்ற துறைகளில் அதன் பயன்பாடு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இத்தகைய அவசியமான சூழலில் இதுபோன்ற பயிலரங்கை ஏற்பாடு செய்ததற்காக பசுமை எரிசக்தி தொழில்நுட்பத் துறை மற்றும் யுனெஸ்கோ அமைப்பின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

***
AD/SV/DL
(Release ID: 2148592)