கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சென்னை துறைமுக ஆணையம் கடல்சார் திறனை மேம்படுத்துவது குறித்த பயிலரங்கு மற்றும் கண்காட்சியை நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
26 AUG 2025 12:29PM by PIB Chennai
இந்திய கடல்சார் வாரம் 2025 மும்பையில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை துறைமுகம் ஆணையம் அது குறித்த பயிலரங்கு மற்றும் கண்காட்சியை 2025 ஆகஸ்ட் 25 அன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், மத்திய மாநில அரசுகள், பெரிய துறைமுகங்கள், தனியார் துறைமுகம் மற்றும் முனையங்கள் தேசிய மற்றும் பிராந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகள், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்பட 150-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறைச் செயலாளர் திரு டி.கே. ராமச்சந்திரன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்தியாவை முன்னணி கடல்சார் நாடுகளின் வரிசையில் எடுத்துச் செல்லும் மத்திய அரசின் முயற்சிக் குறித்து எடுத்துரைத்தார். அவர் கடல்கள் நம்மை இணைப்பதாகவும், மாமல்லபுரத்தில் 2025 ஜூன் 30 முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற்ற இந்தியா – ஆசியான் சொகுசுக் கப்பல் உரையாடல், விசாகப்பட்டினத்தில் ஜூலை 14, 15-ல் நடைபெற்ற பிம்ஸ்டெக் நிகழ்வு ஆகியவை அண்டை நாடுகளுடன் நெருக்கமான மற்றும் ஆழமான பல்துறை உறவுகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் சமீபத்திய முயற்சிகள், 'திட்டங்கள், பொது-தனியார் கூட்டாண்மைகள்' மற்றும் 'மனிதவளம் (துறை, நிறுவனம்) ஆகிய இரண்டு கருப்பொருளில் விவாதிக்கப்பட்டன. இதை சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத் தலைவர் திரு சுனில் பாலிவால் விளக்கினார்.
***
AD/IR/KPG/SG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2160960)
வருகையாளர் எண்ணிக்கை : 19