சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2025 9:06PM by PIB Chennai
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா 03.09.2025 அன்று திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதனை ஒட்டி அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
இந்த சிறப்பு அஞ்சல் உறையை திரு ஜி. பத்மநாபன், வேந்தர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர், திரு எம். கிருஷ்ணன் துணைவேந்தர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர், திருமதி தி. நிர்மலா தேவி, மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர், திருச்சிராப்பள்ளி, திரு ஆர். திருமுருகன், பதிவாளர், திரு ஜி.ஆர். கிரிதரன், நிதி அதிகாரி, திருமதி சுலோச்சனா சேகர், முதுநிலை பேராசிரியர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர் ஆகியோர் முன்னிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாண்புமிகு லெப்டினன்ட் கவர்னர் ஸ்ரீ கே. கைலாஷ்நாதன் அவர்கள் வெளியிட்டார்.
இவ்விழாவில் பேசிய மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் திருமதி டி. நிர்மலா தேவி அவர்கள், சிறப்பு அஞ்சல் உறைகள் முக்கியமான நிகழ்வுகள், ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா போன்றவை நினைவுகூரும் வகையில், புவியியல் அடையாளப் பட்டயப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கைத்தறி தயாரிப்புகள், மலர், விலங்கு, வேளாண்மை, இயற்கை, விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து வெளியிடப்படும் என்றார். அந்த வகையில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படுவதாக தெரிவித்தார்.
இந்த சிறப்பு அஞ்சல் உறையில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர் குறித்த விளக்கம் மற்றும் பல்கலைக்கழக சின்னத்தின் சிறப்பு முத்திரை பதிக்கப்பட்ட வண்ண அஞ்சல் தலை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
OI3N.jpeg)
***
SS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2163509)
வருகையாளர் எண்ணிக்கை : 5