பிரதமர் அலுவலகம்
இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளிடையேயான நல்லுறவு மேலும் வலுவடையும்: பிரதமர் நம்பிக்கை
Posted On:
10 SEP 2025 7:52AM by PIB Chennai
இந்தியா-அமெரிக்கா நாடுகளிடையேயான நல்லுறவு இன்னும் வலுவடையும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இவ்விரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தை வழங்கும் வகையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள பதிவிற்கு, பிரதமர் திரு மோடி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையாகவே நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நாம் இணைந்து செயல்படுவதற்கான எல்லையற்ற வாய்ப்புக்களுக்கு வழி வகுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வர்த்தகம் தொடர்பான விவாதங்களை விரைவில் முடிக்கும் வகையில் இருநாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. அமெரிக்க அதிபர் திரு டிரம்புடன் பேர்ச்சுவார்த்தை நடத்தவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெறும் வகையில் நாம் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.
@realDonaldTrump
@POTUS”
***
(Release ID: 2165135)
AD/SV/KR
(Release ID: 2165223)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam