சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய நல்லாசிரியர் விருது 2025 – கல்வி, ஆராய்ச்சி, சமூகப்பணிகளில் சிறப்பாக செயலாற்றிய புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சிவசத்யா கௌரவிப்பு

Posted On: 11 SEP 2025 7:22PM by PIB Chennai

புதுவைப் பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப  மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியருமான டாக்டர் எஸ். சிவ சத்யா தேசிய நல்லாசிரியர் விருது 2025 பெற்றதற்காக பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்வதுடன், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறது. உயர் கல்வியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் அவர், புதிய பாடங்களை அறிமுகப்படுத்துதல்பாடத்திட்ட வடிவமைப்புமாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு கல்விக் குழுக்களில் பங்கேற்பு போன்றவற்றில் அளித்த அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் குழுவின்  உறுப்பினராகவும், அகில இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் குழுமத்தின் செயலாக்க அதிகாரியாகவும்அனைத்து இளநிலை தொழில்நுட்ப பாடங்களின் முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளராகவும்பல்கலைக்கழகம் மற்றும் இணைக் கல்லூரிகளின் மாணவர்களுக்கான குறைதீர்க்கும் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.

புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபுபேராசிரியர் சிவ சத்யாவின் சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கல்விஆராய்ச்சி மற்றும் மாணவர் நலனில் கொண்டுள்ள அக்கறை ஆகியவற்றுக்காக இப்பல்கலைக்கழகத்தின்  கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.  அவரது வழிகாட்டுதல்கள் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளதாக திரு பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளார்.

 

***

AD/SV/AG/KR/SH


(Release ID: 2165792)