சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கூலித் தொழிலாளியின் உடல் உறுப்பு தானம் பலருக்கு வாழ்வளித்துள்ளது - ஜிப்மர்

Posted On: 11 SEP 2025 7:36PM by PIB Chennai

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம்விருத்தாசலம் தாலுகாகொக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான, 34 வயதுடைய விஸ்வநாதன்சாலை விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக 03.09.2025 அன்று ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு மருத்துவமனை சார்பில்  தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதனையடுத்து அவரது கண்சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் 09.09.2025 அன்று தானமாக பெறப்பட்டன.

மறைந்த விஸ்வநாதன் குடும்பத்தினரின் இந்த செயல் மனிதநேயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இதுபோன்ற உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் பல்வேறு உயிர்களை காக்க முடியும். எனவே அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும். மறைந்த விஸ்வநாதனின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல் உறுப்பு தானம் தொடர்பான காவல்துறையினரின் நடைமுறைகளை உரிய நேரத்தில் மேற்கொண்டதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு பிரசாந்த் எம்.எஸ்., அவர்களுக்கும் ஜிப்மர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

***

AD/SV/AG/SH

 
 
 

(Release ID: 2165798)