சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய இயற்கை விவசாயிகள் திருவிழா 2.0

Posted On: 15 SEP 2025 6:23PM by PIB Chennai

 

                                                                                                                       

புதுச்சேரி பல்கலைக்கழகம்புதுச்சேரி இயற்கை விவசாயிகள் மற்றும் உள்ளூர் விவசாயிகள் கூட்டுறவு சங்கம்வளாகங்களில் மற்றும் சமூகங்களில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் சங்கம்  ஆகியவை இணைந்து பாரம்பரிய இயற்கை விவசாயிகள் திருவிழா 2.0-வை புதுச்சேரி பல்கலைக்கழக கலாச்சார மற்றும் மாநாட்டு மையத்தில் நடத்தின. இவ்விழாவின் நோக்கம் 2030-ம் ஆண்டிற்குள் புதுச்சேரி மற்றும் அருகிலுள்ள தமிழ்நாட்டின் 50 சதவீத வேளாண் நிலங்களில் இயற்கை விவசாய முறைகளை பரப்புவதாகும்.

இந்த நிகழ்வில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் மாணவர்கள்விவசாயிகள்ஆராய்ச்சியாளர்கள்தொழில்முனைவோர்நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுபுதுவைப் மண்டலத்தில் இயற்கை பாரம்பரியங்களை வலுப்படுத்தும் பணி மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றியபுதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபுமகளிர் சுயஉதவி குழுக்கள்  தங்களின் ஊட்டச்சத்து மிக்க உள்ளூர் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியதற்காக பாராட்டு தெரிவித்தார். மேலும் உணவே மருந்து” என்ற கொள்கையை வலியுறுத்திஇளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆரோக்கியமான உணவுமுறையை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறினார். அது நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறையியல் நோய்களைத் தடுக்க உதவும் என்று கூறினார். “நோய் வரும்முன் காப்போம்” எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், மூளைச் செயல்பாடுகளுக்கும்உடல் நலத்திற்கும் சீரான உணவு அவசியம் எனக் குறிப்பிட்டார்ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்காக இயற்கை மற்றும் உயிர்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

***

SS/IR/AG/KR/SH


(Release ID: 2166866)