சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கோயம்புத்தூரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் தேசிய இந்தி தினம் கடைபிடிக்கப்பட்டது
Posted On:
15 SEP 2025 6:28PM by PIB Chennai

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் கோயம்புத்தூரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி, தேசிய மொழியாக இந்தியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்க, 2025 செப்டம்பர் 15 அன்று தேசிய இந்தி தினத்தை கடைப்பிடித்தது.
இதையொட்டி கட்டுரை எழுதுதல் மற்றும் சொற்றொடர் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி ஒரு பன்முக கலாச்சார கல்விச் சூழலை வளர்க்கிறது. தேசிய அடையாளத்தை வலுப்படுத்துவதிலும், கலாச்சார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதிலும், பன்முகத்தன்மையில் ஒற்றுமையை வளர்ப்பதிலும் இந்தியின் பங்களிப்பை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டியது.
***
SS/IR/AG/KR/SH
(Release ID: 2166871)