தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் நெட்வொர்க் தரம் குறித்து கொல்கத்தா பகுதியில் ஆய்வு
प्रविष्टि तिथि:
15 SEP 2025 4:33PM by PIB Chennai
கொல்கத்தா நகரம், ஹவுரா, ஹூக்ளி மாவட்டங்கள் மற்றும் கொல்கத்தா மெட்ரோ ரயில் வழித்தடப் பகுதிகளில், நெட்வொர்க் தரம் குறித்த சோதனை முடிவுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. 2025 ஜூலை 9-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொல்கத்தா டிராய் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள், நகர்ப்புற பகுதிகள், நெட்வொர்க் ஹாட்ஸ்பாடுடகள், கிராமப்புற குடியிருப்பு பகுதிகள், நகர்ப்புற ரயில் நெட்வொர்க் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டு சூழல்களில், மொபைல் நெட்வொர்கின் உண்மையான செயல்திறனை வெளிப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி உள்ளிட்ட மதிப்பிடப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வுக்கு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைக்கப்பட்ட சாதனங்களும் முறையான விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. ஆய்வறிக்கை விவரம் www.trai.gov.in என்ற ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஆணையத்தின் ஆலோசகர் திரு பிரவீன்குமாரை (கொல்கத்தா மண்டல அலுவலகம்) தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
***
SS/GK/LDN/KR/SH
(रिलीज़ आईडी: 2166922)
आगंतुक पटल : 25