பாதுகாப்பு அமைச்சகம்
2025-ம் ஆண்டுக்கான பயிற்சியில் பங்கேற்க இந்திய கடற்படை கப்பல் நிஸ்டார் சிங்கப்பூர் கடற்படை தளத்திற்கு வருகை
Posted On:
15 SEP 2025 4:41PM by PIB Chennai
இந்திய கடற்படையில் அண்மையில் இணைக்கப்பட்ட முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். நிஸ்டார் கப்பல், 2025 செப்டம்பர் 14-ம் தேதியன்று சிங்கப்பூரின் சாங்கி துறைமுகத்திற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இன்று முதல் நடைபெறும் பசிபிக் ரீச் பயிற்சியில் இந்தக் கப்பல் பங்கேற்கும்.
2025 ஜூலை 18-ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஐ.என்.எஸ். நிஸ்டார், கடற்படை கட்டுமானத்தில் இந்தியாவின் தன்னம்பிக்கை மற்றும் சுயசார்பு இலக்கிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பலின் இருபுறமும் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன. மேலும் விரிவான ஆழ்கடல் மூழ்குதல் அமைப்புகளை இந்தக் கப்பல் கொண்டுள்ளது. ஆழ்கடல் மீட்பு வாகனம் உள்ளிட்ட நவீன வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. 2018 – 19 ம் ஆண்டுகளில் இருந்து ஆழ்கடல் மீட்பு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் கடற்பகுதியில் 650 மீட்டர் ஆழம் வரை மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் திறனை இந்தக் கப்பல் கொண்டுள்ளது. இதன்மூலம் நீர்மூழ்கி கப்பல் மீட்பு அமைப்புகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
***
SS/GK/LDN/KR/SH
(Release ID: 2166962)
Visitor Counter : 2