எரிசக்தி அமைச்சகம்
மின் விநியோகம் தொடர்பான அமைச்சர்கள் குழுவின் 5-வது கூட்டம்- மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமை தாங்கினார்
प्रविष्टि तिथि:
16 SEP 2025 12:50PM by PIB Chennai
மின் விநியோகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவின் 5-வது கூட்டத்திற்கு மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமை தாங்கினார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணையமைச்சர்
திரு ஸ்ரீபத் யெஸ்சோ நாயக், தமிழ்நாட்டின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு மனோகர் லால், பொதுமக்களுக்கு தரமான மின் விநியோகத்தை உறுதி செய்ய விநியோகப் பயன்பாடுகளில் வலுவான நிதி நிலைமை இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். மின்சாரத்துறை லாபகரமாக இருப்பதை உறுதி செய்ய தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள், ஒழுங்குமுறை ஆணையங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்று அவர் குறிப்பிட்டார். அனைவருக்கும் அனைத்து நேரங்களிலும் மின்சாரம் என்ற உறுதிபாட்டை மாநில அரசுகள் நிறைவேற்ற அமைச்சர் வலியுறுத்தினார்.
***
SS/SMB/RJ/KR/SH
(रिलीज़ आईडी: 2167297)
आगंतुक पटल : 53