கலாசாரத்துறை அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட பரிசுகள், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது – மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
प्रविष्टि तिथि:
16 SEP 2025 5:37PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளதாக மத்திய கலாச்சார அமைச்சகம் இன்று அறிவித்தது. 1,300-க்கும் அதிகமான பரிசுப் பொருட்கள், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட உள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
ஓவியங்கள், கலைப்பொருட்கள், சிற்பங்கள், தெய்வங்களின் சிலைகள் மற்றும் சில விளையாட்டு சார்ந்த பொருட்கள் உள்ளிட்டவை ஏலம் அளிக்கப்பட உள்ளது.
2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முதல் முறையாக பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இதுவரை ஆயிரக்கணக்கான தனித்துவமிக்க பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டதில் ரூ.50 கோடிக்கும் மேல் திரட்டப்பட்டு அவை கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. www.pmmementos.gov.in என்ற இணையதளம் மூலம் அந்தப் பரிசுப் பொருட்கள் ஏலம் அளிக்கப்பட உள்ளது.
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2167316)
आगंतुक पटल : 31