நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“ஆபரேஷன் வீட் அவுட்”- ன் கீழ் கடந்த 20 நாட்களில் நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் 108.67 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 16 SEP 2025 4:17PM by PIB Chennai

இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் "ஆபரேஷன் வீட் அவுட்" நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செப்டம்பர் 13-14, 2025 அன்று 39.2 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் நீரில் வளரக்கூடிய போதை தரும் தாவர வகைகளைப் பறிமுதல் செய்தது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், பாங்காக்கிலிருந்து வந்த இரண்டு இந்தியர்களை இயக்குனரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களது உடமைகளை சோதனை செய்ததில் 39.2 கிலோ எடையுள்ள போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விரைவான  நடவடிக்கையினால் அதன் பெறுநர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு வழக்கில்,  தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட 7.8 கிலோ எடையுள்ள போதைப்பொருளை டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,  இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டார்கள். 

2025 ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 12 வரையிலான காலகட்டத்தில், தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்பட்ட 61.67 கிலோ போதைப்பொருட்களை டிஆர்ஐ அதிகாரிகள் தனித்தனியாக பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் கடந்த 20 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 108.67 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன


 

.

                                                                                                ***

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2167397) आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , Telugu , English , Urdu , हिन्दी