நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை மற்றும் செயல்திறன் மேம்பாட்டை வலியுறுத்தும் சிறப்பு இயக்கம் 5.0-ல் மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பங்கேற்க உள்ளன

प्रविष्टि तिथि: 16 SEP 2025 5:47PM by PIB Chennai

அரசு அலுவலகங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் நிலுவையில் உள்ள பணிகளை குறைக்கும் நோக்கத்துடன் அக்டோபர் 2 முதல் 31 வரை சிறப்பு இயக்கம் 5.0- நடைபெறவிருக்கிறது.  நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையால் வழிநடத்தப்படும் இந்த மாற்றகரமான பிரச்சாரத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் இயங்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் அதன் கீழ் செயல்படும் அலுவலகங்கள் தீவிரமாக பங்கேற்கும்.

இந்த சிறப்பு இயக்கத்தின் கீழ் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் தொடர்புடைய நான்கு முக்கிய துறைகளில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கவனம் செலுத்தும்: மின்னணு கழிவுகளை அகற்றுதல்ஆவணங்களின் மேலாண்மைஇடத்தை மேம்படுத்துதல் மற்றும் அலுவலகங்களை அழகுப்படுத்துதல்குறைதீர்க்கும் பணிகளை விரைவுப்படுத்துதல்.

                                                                             ***

 

AD/BR/SH

 
 
 

(रिलीज़ आईडी: 2167406) आगंतुक पटल : 35
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी