சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் சென்னையில் ரத்த தான முகாமை தொடங்கிவைத்தார்

Posted On: 17 SEP 2025 7:02PM by PIB Chennai

                                                  

ரத்த தான அமிர்தப் பெருவிழா 2.O என்ற இயக்கத்தின் மூலம்உலகின் மிகப்பெரிய ரத்த தான முகாம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாகசென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்ற ரத்த தான முகாமை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கிவைத்தார்.

இந்த முகாமில்அக்கல்லூரியின் தலைவர்முதல்வர் உள்ளிட்ட நிர்வாகிகள்கீழ்ப்பாக்கம் தெராபந்த் சபா நிர்வாகிகள்ஆசிரியர்கள்மாணவர்கள் மற்றும் ரத்த தானம் செய்பவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுரத்த தானம் செய்தனர்.

பெண்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு நாடு முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நலமான பெண்கள் வளமான குடும்பம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும்  இந்த முகாமில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்து கொண்டார். 

 இந்த முகாமில்தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவிதுறை சார்ந்த அதிகாரிகள்பயனாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

 

                                                                   

                                                                                            

***

AD/SS/SV/AG/SH

 
 
 

(Release ID: 2167724)