உள்துறை அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி சரியான பணிகளை ஊக்குவித்து வருகிறார், அவரது ஒவ்வொரு முடிவுகளும் நாட்டை தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது - உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
17 SEP 2025 3:28PM by PIB Chennai
நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அயராது பாடுபட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் 75-வது பிறந்த தினத்தின்று மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு அடையாளமாகவும், லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் அவரது பிறந்த தினம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேசமே முதன்மையானது என்ற கொள்கையின் அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவருக்காகவும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பு, உறுதியான முடிவுகள், தெளிவான கொள்கைகள் ஆகியவற்றின் மூலம் விளிம்புநிலை மக்கள், ஏழைகள், பின்தங்கிய வகுப்பினர், பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அளப்பரிய பங்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்சார்பு இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் வகையில் அவர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளில் உலகத்தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்துவதிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்று புகழாரம் சூட்டியுள்ளார். அசாமில் உள்ள நீண்ட மேம்பாலம் மற்றும் காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான ஷெனாப் ரயில் பாலம், குறைகடத்தி உற்பத்தி, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு போன்ற எண்ணற்ற திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது என்று அவர் கூறினார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகள் யூபிஐ செயலி மூலம் தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்த பெருமை பிரதமரையே சாரும் என்று அவர் கூறினார்.
வளர்ச்சித் திட்டப்பணிகளும், பொருளாதார நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறிவந்த நிலையில், ஏழைகளுக்கான நலத்திட்டங்களையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் ஒரே சமயத்தில் மேற்கொள்ள முடியும் என்பதை பிரதமர் நிரூபித்துள்ளதாக அவர் கூறினார். அவரது சீரிய தலைமையின் கீழ் இந்தியா உலக அளவிலான பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உலக அளவிலான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் பிற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர் அளவில் இருக்கும் என்றும் சர்வதேச செலாவணி நிதியம் மதிப்பிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் உள்ள ஏழைகளில் 600 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்புமிக்க செயல்திறன் அவரது ஆளுமையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது என்றும், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் முக்கிய தலைவராக உலக நாடுகள் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் மிகச்சிறந்த தலைமை பண்பு கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இதுவரை 27 நாடுகள் மிக உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளதாக அவர் கூறினார்.
பிரதமரின் தலைமையின் கீழ் விண்வெளி துறையில் நிலவின் தென்துருவம் முதல், துவாரகாவில் ஆழ்கடல் வரை நாடு முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கொவிட் பெருந்தொற்றுக்கு உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை உற்பத்தி செய்வது, உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், புத்தொழில் நிறுவனங்கள், புதுமை கண்டுபிடிப்புகள், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலைகளை நிர்ணயம் செய்வது, உற்பத்தி துறையை மேம்படுத்துவது என தற்சார்பு இந்தியாவுக்கான இலக்குகளை அடைய அனைத்து துறைகளின் வளர்ச்சிக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அத் ஷா தெரிவித்துள்ளார்.
***
SS/SV/AG/SH
(Release ID: 2167753)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam