பாதுகாப்பு அமைச்சகம்
பேச்சுவார்த்தைகள் தோல்வி அடையும் போது இந்தியா மேற்கொள்ளும் கடுமையான முடிவுகள் குறித்து ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாலக்கோட்டில் விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதல் மூலம் அறிந்துகொள்ள முடியும்- பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
17 SEP 2025 3:33PM by PIB Chennai
இந்தியாவின் பொறுமை அதன் வலிமையை உணர்த்துவதாகவும், ஆபரேஷன் சிந்தூர், 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் மற்றும் 2019-ம் ஆண்டில் பாலக்கோட் விமானப்படை தாக்குதல் ஆகியவை அதற்கு சான்றாக அமைந்துள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடைபெற்ற விடுதலைநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பேச்சுவார்த்தைகள் தோல்வி அடையும் போது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு கடுமையான முடிவுகளை தெரிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுவதாக குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்துள்ளதாகவும், பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நல்லெண்ணம் மற்றும் அமைதியின் அடிப்படையில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடையும் போது இந்தியா அதற்கான வலிமையான பதிலடி கொடுப்பதையும் அறிந்து வைத்துள்ளதாக அவர் கூறினார்.
***
SS/SV/AG/SH
(Release ID: 2167889)