தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம் இயக்கத்தின் கீழ் சுகாதார முகாம்களை இஎஸ்ஐசி நடத்தவுள்ளது

Posted On: 17 SEP 2025 5:48PM by PIB Chennai

ஆரோக்கியமான பெண் ஆரோக்கியமான குடும்பத்தின் அடித்தளமாகும். ஆரோக்கியமான குடும்பம், வலிமையான, வளமையான நாட்டிற்கான அடித்தளமாகும். இந்தத் தொலைநோக்கின் அடிப்படையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 8-வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம் இயக்கம் என்ற தலைப்பில் நாடு முழுவதும் சுகாதார முகாம்களை நடத்துகிறது.  இந்த இயக்கம் செப்டம்பர் 17 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களல்  மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள், சமூக சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் இதர  சுகாதார நலன் மையங்களில் சுகாதார முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் ஊட்டச்சத்துக் குறித்த விழிப்புணர்வு, ஆரோக்கியமான சமையல், வழக்கமான உடல் பரிசோதனைநோய்த்தடுப்பு, மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை உள்ளிட்டவை குறித்த வழிகாட்டுதல்கள்  நடைபெறவுள்ளன.

அந்த வகையில், நாட்டில் உள்ள 160 இஎஸ்ஐ மருத்துவமனைகள், 1,603 சிறு மருத்துவமனைகள், மற்றும் தன்னார்வத்துடன் இணைந்த சுமார் 100 மருத்துவமனைகளிலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.  அத்துடன் 50 ரத்த தான முகாம்களும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167672

                                                                                              ----

SS/IR/KPG/SH


(Release ID: 2168203)
Read this release in: English , Urdu , Hindi