பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு நில மேலாண்மை மற்றும் படைவீரர் முகாம் நிர்வாகத்தின் எதிர்காலம் குறித்த இரண்டு நாள் மாநாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்
Posted On:
17 SEP 2025 5:04PM by PIB Chennai
எதிர்காலத்திற்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவது குறித்த 2 நாள் தேசிய மாநாட்டை புதுதில்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை (18.09.2025) தொடங்கிவைக்கிறார். இந்த மாநாட்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு துறையை நவீனமயமாக்குவது, நவீன டிஜிட்டல் கருவிகள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிப்பது, நிர்வாக கட்டமைப்புகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்படுகிறது.
துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் அரசு துறையில் பணியாற்றி வரும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு பாதுகாப்பு துறையில் எதிர்கால தேவைகள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167630
***
SS/SV/AG/SH
(Release ID: 2168211)