வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை
Posted On:
17 SEP 2025 5:02PM by PIB Chennai
இந்திய-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் இடையே புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை விரிவாக்குவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இம்மாதம் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறவுள்ள 13-வது இந்திய – யூஏஇ முதலீடுகளுக்கான உயர்நிலை பணிக்குழு கூட்டத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்கிறார். இந்த கூட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மன்னர் ஷேக் ஹமத் பின் சயீத் அல் நயான் மற்றும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், இரட்டை வரிகளை நீக்குவதற்கான ஒப்பந்தம் மற்றும் மத்திய வங்கி தொடர்பான அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் விண்வெளித்துறை போன்ற முக்கிய துறைகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167629
***
SS/SV/AG/SH
(Release ID: 2168216)
Visitor Counter : 11