பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு 2025 சுமூகமாக நடைபெற்று வருகிறது: பணியாளர் தேர்வாணையம்

Posted On: 18 SEP 2025 1:36PM by PIB Chennai

2025 செப்டம்பர் 12  அன்று தொடங்கிய பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு 2025 சுமூகமாக நடைபெற்று வருகிறது என்று பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது வரும் 26-ம் தேதி வரை நடைபெறும்.

நாடு முழுவதும் 129 நகரங்களில் 227 மையங்களில் தினந்தோறும் 3 ஷிப்டுகளாக  நடைபெறும் இந்தத் தேர்வில் 28 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகிறார்கள் என்று பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 5,26,194 தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். ஒரு சில மையங்களில் சில தொழில்நுட்ப பிரச்சனைகள் இருந்த போதும் நாடு முழுவதும் இந்த தேர்வு சுமூகமாக நடைபெற்றுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

தேர்வு அனுபவத்தை மேம்படுத்த ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னூட்ட பகுதி அண்மையில் தொடங்கப்பட்டது. இதில் தேர்வர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிப்பதை அடிப்படையாக கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

***


SS/SMB/AG/SH


(Release ID: 2168263)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati