தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இஎஸ்ஐசி அரியானா மண்டல அலுவலகம் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பதிவை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது
Posted On:
18 SEP 2025 3:14PM by PIB Chennai
இஎஸ்ஐசி அரியானா மண்டல அலுவலகம் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பதிவை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இஎஸ்ஐ சட்டத்தின் விதிமுறைகள் குறித்து தொழில்நிறுவன உரிமையாளர்களுக்கும் பள்ளிகளின் அலுவலர்களுக்கும் எடுத்துரைப்பதில் இக்கருத்தரங்கம் கவனம் செலுத்தியது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள பள்ளி, தொழிற்சாலை, மருத்துவமனை, வணிக நிறுவனம் ஆகியவை இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டும். இந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரிக்கும் போது 15 நாட்களுக்குள் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படுவது தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வது மட்டுமின்றி தொழிலாளர் இழப்பீடு சட்டம் 1923, மகப்பேறு பயன் சட்டம் 1961 ஆகியவற்றிலிருந்து எழும் நிதிப் பொறுப்புகளிலிருந்து உரிமையாளர்களைப் பாதுகாக்கிறது.
புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள பல நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாதது கண்டறிந்ததையடுத்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பதிவை மேம்படுத்தும் திட்டத்தை முந்தைய இஎஸ்ஐசி தொடங்கியுள்ளது. இதன் மூலம் புதிதாக பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் முந்தைய ஆவணங்கள் ஆய்வு செய்யப்படாது, முந்தைய பங்களிப்புகள் வட்டி அல்லது அபராதங்கள் கோரப்படாது உள்ளிட்ட அம்சங்கள் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த சிறப்புத்திட்டத்தின் கீழ் 2025 டிசம்பர் 31 வரை பதிவுகள் நடைபெறும்.
***
SS/IR/KPG/SH
(Release ID: 2168293)