ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 5.0-வில் முழுவீச்சில் ஈடுபட இந்திய ரயில்வே தயாராகிறது

Posted On: 18 SEP 2025 3:01PM by PIB Chennai

நாடு முழுவதும் 2025 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு இயக்கம் 5.0-வில் இந்திய ரயில்வேயை ஈடுபடுத்தி அந்த இயக்கத்தை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்காக ரயில்வே அமைச்சகம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்த இயக்கங்களை சிறப்பாக நடத்துவதை உறுதி செய்வதற்கான தயார் நிலைகள் குறித்து ரயில்வே வாரிய தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு சத்தீஷ்குமார் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பாக  விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பொது மேலாளர்கள் மற்றும் இதர பிரிவுகளின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் அவர்கள் அனுப்பியுள்ளனர். இந்த இயக்கம் தொடர்பாக ரயில்வே வாரிய செயலாளர் தலைமையில், அனைத்து பொறுப்பு அதிகாரிகளுடன் 27.08.2025 அன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்து 17 ரயில்வே மண்டலங்கள், 70 பிரிவு அலுவலகங்கள், 10 பொதுத்துறை நிறுவனங்களும் 9 உற்பத்தி பிரிவுகள், 9 மத்திய பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அவர்களுடைய பங்களிப்பை உறுதி செய்வதற்காக விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

------

SS/IR/KPG/KR/SH

 


(Release ID: 2168320)