மத்திய பணியாளர் தேர்வாணையம்
மாணவர்களின் அடையாளத்தை சரிபார்த்தலுக்காக முகஅங்கீகார தொழில்நுட்பத்தை மத்திய குடிமைப்பணியாளர் தேர்வாணையம் பயன்படுத்தியது
Posted On:
18 SEP 2025 3:51PM by PIB Chennai
மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு எழுதும் மாணவரின் அடையாளத்தை சரிபார்த்தலுக்காக செயற்கை நுண்ணறிவுடன் கூடிய முக அங்கீகார தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. குருகிராமில் 2025 செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற என்டிஏ, என்ஏ-II, தேர்வு 2025, சிடிஎஸ்-II 2025 தேர்வுகளின் போது இம்முறை கடைபிடிக்கப்பட்டது. தேர்வு மையங்களில் மாணவர்கள் எளிதாக நுழையும் வகையிலும், தேர்வு நடைமுறையின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் தேசிய மின்னணு ஆளுகை பிரிவு ஒத்துழைப்புடன் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தொழில்நுட்பம் மூலம் விண்ணப்பப் படிவங்களில் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் மாணவர்களின் முக அடையாளங்களுடன் மின்னணு முறையில் சரிபார்க்கப்பட்டது. இந்தப் புதிய முறை மூலம் மாணவர்களின் அடையாளங்களை சரிபார்த்தலுக்கான நேரம் ஒரு மாணவருக்கு சராசரியாக வெறும் 8 முதல் 10 விநாடிகள் வரையாக குறைத்துள்ளது.
நேர்மையான வெளிப்படையான உயர்தரங்களை உறுதி செய்வதற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆணையம் உறுதி பூண்டுள்ளதாக மத்திய குடிமைப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் டாக்டர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
***
SS/IR/KPG/KR/SH
(Release ID: 2168322)
Visitor Counter : 7