சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
உத்தரப்பிரதேச மாநில தோட்டக்கலை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, சென்னையில் உருளைக்கிழங்கு சம்பந்தமான நுகர்வோர் விற்பனையாளர் கூட்டத்தை நடத்தியது
Posted On:
19 SEP 2025 11:19AM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநில தோட்டக்கலை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, 2025 செப்டம்பர் 18 அன்று, சென்னையில் உருளைக்கிழங்கு சம்பந்தமான நுகர்வோர் விற்பனையாளர் கூட்டத்தை நடத்தியது.
உத்தரப்பிரதேச உருளைக்கிழங்கு வகைகளை வணிகம் செய்ய ஊக்குவிப்பதற்காகவும், தமிழ்நாடு மாநிலத்திலிருந்து ஏற்றுமதி திறனை அடையாளம் காணவும், உத்திரப்பிரதேச மாநில தோட்டக்கலை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (HOFED), வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மற்றும் தமிழ்நாட்டின் தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை (வேளாண் வணிகம்) ஆகியவை இணைந்து சென்னையில் உருளைக்கிழங்கு நுகர்வோர் விற்பனையாளர் சந்திப்புக்கு (BSM) ஏற்பாடு செய்திருந்தன.
இந்தக் கூட்டத்தின் போது தோராயமாக 2700 மெட்ரிக் டன்னை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள்/ ஏற்றுமதியாளர்களிடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஈரோடு, கோயம்பேடு சந்தைகளைச் சேர்ந்த வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள், உத்தரப்பிரதேசத்தின் உருளைக்கிழங்கு விவசாயிகள் உள்ளிட்ட சுமார் 50 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். உத்தரப் பிரதேச மாநில தோட்டக்கலை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் மேலான் இயக்குனர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மண்டல தலைவர், தமிழ்நாடு மாநில தோட்டக்கலைத் துறையின் கூடுதல் இயக்குநர், வேளாண் துறை துணை இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***
SS/KR
(Release ID: 2168346)