எரிசக்தி அமைச்சகம்
தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் 2025-க்கு புதிய வகைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Posted On:
17 SEP 2025 6:29PM by PIB Chennai
தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் 2025-க்கு “உள்ளடக்கம் உருவாக்குவோர் மற்றும் செல்வாக்கு செலுத்துவோர்” என்ற புதிய வகைமையை மத்திய மின்சார அமைச்சகத்தில் உள்ள எரிசக்தி திறன் பிரிவு அறிமுகம் செய்துள்ளது.
பிரதமரின் லைஃப் (சுற்றுச்சூழலுடன் இணைந்த வாழ்க்கைமுறை) இயக்கத்திற்கு இணங்க எரிசக்தி திறன், பாதுகாப்பு, நீடித்த வாழ்க்கை நடைமுறைகள் என்பது குறித்து விழிப்புணர்வை பரவலாக்க டிஜிட்டல் ஊடக திறனை பயன்படுத்த இந்த முயற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக செயல்படுத்தப்படவுள்ள இந்தப் போட்டிக்கான விவரங்கள் :
· ஏதாவது ஒரு முக்கியமான ஊடக தளத்தில் குறைந்தபட்சம் 10,000 பின்தொடர்வோர் / சந்தாதாரர்களைக் கொண்ட டிஜிட்டல் உள்ளடக்கம் உருவாக்குவோர் மற்றும் செல்வாக்கு செலுத்துவோருக்கு இது பொருந்தும்.
· பங்கேற்பாளர்கள் கீழ்காணும் மையப் பொருட்களை இந்தி அல்லது இதர இந்திய மொழிகளில் (ஆங்கிலம் அல்லது இந்தியில் மொழிமாற்றத்துடன்) 90 விநாடிகள் வரை குறுகிய கால வீடியோக்களை உருவாக்க வேண்டும்.
- வீட்டில் எரிசக்தியை சேமித்தல்
- குளிரூட்டும் சாதனத்தை 24 டிகிரியில் வைத்தல்
- 5 நட்சத்திர உபகரணங்களை தெரிவு செய்தல் – கூடுதல் நட்சத்திரங்கள், கூடுதல் சேமிப்புகள்
- எரிசக்தி திறன் கொண்ட விளக்குகள் வீடுகளை பிரகாசிக்க வைக்கின்றன
- பசுமை மற்றும் நீடிக்கவல்ல கட்டடம்
- பொறுப்புணர்வுடன் விழாக்களைக் கொண்டாடுதல்
போட்டிக்கான நுழைவு விண்ணப்பங்கள் பங்கேற்பாளர்களின் சமூக ஊடக தளத்தில் #NECA2025 என்ற ஹேஷ்டேகுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதிகாரப்பூர்வ தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளுக்கான போர்ட்டல் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவு மற்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை www.neca.beeindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். தெரிவு செய்யப்பட்ட படைப்பாளிகள் 2025 டிசம்பர் 14 அன்று புதுதில்லியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பாராட்டப்படுவார்கள். இந்த விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பார்.
தொடர்புக்கான விவரங்கள் – தொலைபேசி எண் – 011-26766728, செல்பேசி எண்- 96542 49666, மின்னஞ்சல் – media@beeindia.gov.in
***
AD/SMB/AG/SH
(Release ID: 2168661)
Visitor Counter : 12