சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கரூரில் அஞ்சலக திட்டங்கள் குறித்த விழிப்புணர்வ நிகழ்ச்சி நடைபெற்றது

Posted On: 20 SEP 2025 2:57PM by PIB Chennai

இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாடு வட்டம், மத்திய மண்டலம் கரூர் கோட்டத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரசாரம் 18.08.2025 தொடங்கி நடைபெற்று வருகிறது இது மேலும் 17.11.2025 வரை நடைபெறும்.

அதன் ஒரு பகுதியாக 19.09.2025 அன்று கரூர் மாவட்டத்தில் சின்ன சேங்கல் கிராமத்தில் விழிப்புணர்வு கிராம சபை கூட்டம் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் திருமதி  டி.நிர்மலா தேவி தலைமையில் நடைபெற்றது.

அதில் கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திருமதி. ஆர் தமிழினி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக சேங்கல் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர், திரு எம்.செந்தில்குமார், தலைமை ஆசிரியர், அரசு மேல் நிலைப் பள்ளி, சின்ன சேங்கல், திரு.எம்.மகாலிங்கம், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சின்ன சேங்கல்  திரு. A. அன்புச்செல்வன், அஞ்சலக  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பொது மக்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சிறப்பு ஆதார் முகாம் 16.09.2025 முதல் சேங்கல் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழிப்புணர்வு கிராம சபை கூட்டத்தில் சேமிப்பு கணக்கு, கிராமிய அஞ்சல் காப்பீடு, விபத்து காப்பீடு போன்ற திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

மேலும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று பயனடைந்தனர். மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளருக்கான விழிப்புணர்வு மற்றும் அஞ்சலகங்களில் உள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

***

AD/SV/KPG/RJ


(Release ID: 2168899)